search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை கூட்டம்"

    • கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
    • ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராக தொடங்கி உள்ளது.

    டெல்லியில் இது தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரச்சார கட்டுப்பாடுகள் என்று பல்வேறு வகைகளில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண் கோயல் ஆகிய மூவரும் மாநில வாரியாக சுற்றுப் பயணம் செய்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். 543 தொகுதிகளிலும் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பார்கள்.

    அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 7 கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தடவையும் அதேபோன்று ஓட்டுப்பதிவு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் 10 லட்சத்து 18 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க முதல் கட்டமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை கூடுதலாக தேவைப்படும். எனவே ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மின்னணு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில் இந்த தடவை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையர்கள் கருதுகிறார்கள்.

    இது தவிர சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    • சென்னை ராஜ் பவனில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

    ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராஜ் பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ரெயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

    ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் இருந்து யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆளுநர் இன்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

    ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை, என்டிஆர்எஃப், ரயில்வே, பிஎஸ்என்எல், ஐஎம்டி, ஏஏஐ மற்றும் ரெட் கிராஸ் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

    குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும் போது செய்து வருகின்றன.

    அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

    சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.

    மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

    • மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க முடிவு.
    • பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

    டெல்லியில் நாளை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, கோவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    இதற்கிகடையே, மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கவும், தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
    • எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

    பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

    எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

    இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் ஆலோசனை கூட்டம்.
    • ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்கொள்ளும் நோக்கில் எதிர் கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மற்றொரு ஆலோசனை கூட்டம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

     

    இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி, கே.சி. வேனுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, ஜெ.எம்.எம். கட்சியின் மஹூவா மஜி, ம.தி.மு.க. சார்பில் வைகோ, ஆர்.எஸ்.பி. கட்சியின் என்.கே. பிரேமசந்திரன், சி.பி.ஐ. சார்பில் பினோய் விஸ்வம், ஜெ.டி.யு. சார்பில் லாலன் சிங், எஸ்.பி. கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் மற்றும் எஸ்.டி. ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இத்துடன் ஆர்.எல்.டி. சார்பில் ஜெயந்த் சவுத்ரி, என்.சி.பி. கட்சியின் வந்தனா சாவன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராகவ் சத்தா, தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் சவுரவ் கோகோய், நசீர் ஹூசைன் மற்றும் ராஜானி பாட்டீல், சி.பி.ஐ.எம். சார்பில் எலமரம் கரீம், ஆர்.ஜே.டி. சார்பில் ஃபயாஸ் அகமது, கேரளா காங்கிரஸ் சார்பில் ஜோஸ் கே மணி, என்.சி. சார்பில் ஹஸ்னைன் மசூதி, ஐ.யு.எம்.எல். சார்பில் முகமது பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

    • பேரூர் கழக செயலா ளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
    • நலத்திட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வது குறித்து விளக்கமளித்தார்

    மாரண்டஅள்ளி,

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் கழக செயலாளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாநில தகவல் நுட்ப துணைசெயலாளர் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் மாறன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட தி.மு.க மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர் கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்க ளுக்கு வாக்கா ளர்களின் விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பிணர்கள் விபரம், அரசிடம் இருந்து பெறும் நலதிட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பு விளக்கமளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கில் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் பிரிவு அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் பூத் கமிட்டி வாக்கு சாவடி முகவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
    • கூட்டத்தின்போது தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைமை அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் பாலகுருநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் 25, 26-ந் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயலாற்றுதல் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., எடுத்து கூறி னார்.

    இதில் மாவட்ட இணை செயலாளர் சண்முகப்பிரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்மு கையா, முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செய லாளர் கந்தசாமி பாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் முழுவீச்சில் பாடுபடவேண்டும் என்று மாவட்ட செயலாளர் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் அடுத்துள்ள முத்தப்பன்பட்டியில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தாவது:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். கடந்த எம்.பி. தேர்தலின் போது நாம் எதிர்க்கட்சியாக இருந்த போதே தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 39 தொகுதிகளில்வெற்றி பெற்றோம். தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சி யாக உள்ளோம். எனவே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசைக்கமுடியாத சக்தியாக திகழவேண்டும்.

    இந்த முறை நாடா ளுமன்ற தேர்தலில் திருமங்கலம் உள்ளிட்ட இந்த மூன்று தொகுதி களிலும் 50 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்று நாம் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு சான்றாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவேண்டும். எனவே வரும் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்த லாகும். கட்சியினர் முழுவீச்சில் பாடுபட்டு நமது வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி பார்வையாளர் மாரியப்பன் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், இளமகிழன், துணை செயலாளர் லதா அதிய மான், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ஆலம்பட்டிசண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நாகராஜன், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வருசை முகமது, அணி அமைப்பா ளர்கள் மாணவரணி பாண்டி முருகன், இளை ஞரணி விமல், மீனவரணி செல்வம், சுற்றுசூழல்அணி செல்வேந்திரன், விவசாய அணி வில்லூர் ஞான சேகரன், திருமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன்அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா உருவாக்கித்தந்த திட்டங்கள் வருகிற தேர்தலில் வாக்குகளாக மாறும்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட் டில் கழக பூத் கமிட்டி, மகளிர் குழு அமைத்தல், இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாச றைக்கூட்டம் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுதா.கே.பரமசிவன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதா வது:-

    புரட்சித்தலைவி அம்மா தேசியம் கடந்து உலக மக்கள் அனைவரும் நேசிக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கியவர். ஏழை, எளிய மக்களை நேசித்து அவர்களின் வாழ்வு வளம் பெற செய்தவர். சாதி, மதம் மொழி கடந்து மக்கள் அனை வராலும் நேசிக்கப்படக்கூடிய திறம்பட ஆட்சியை நடத்தியவர்.

    அவரது வழியில் வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கழகத்தின் கடைநிலை ஊழியராய் வந்து கழகத்தின் பொதுச்செயலா ளராக உருவாகிக்கிறார் என் றால் அவர் கொண்ட விசுவா சமும், உறுதிமிக்க கொள்கையும் தான் காரணம். கழக பொதுச் செயலாளர் எடப்படாடியார் அனைத்தையும் அறிந்தவர். அவரை யாரும் ஏமாற்றவோ, அச்சுறுத்தவோ முடியாது.

    ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க கூடியவர் எடப்பாடியார் மட்டும் தான். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். காவிரி, முல்லை பெரி யாறு அணைகள் பிரச்சினை யில் தமிழகத்தின் உரிமையே நிலைநாட்டியது அம்மா தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

    ஏழை, எளிய மக்களுக்கும், அன்றாடம் பசியில் வாடுவோ ருக்கும் அம்மா ஏற்படுத்திய நல்ல பல திட்டங்கள் அனைத் தும் வரும் தேர்தலில் நமக்கு வாக்குகளாக மாறும். மேலும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள் ஆகியோர்களின் தேவைகளுக்கேற்ப நமது பொதுச் செயலாளர் பார்த்து பார்த்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

    வரும் தலைமுறையினரின் நோக்கங்களையும், எதிர்பார்ப் புகளையும் நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் நிச்சயம் செய்து தருவார். நாம் பூத் கமிட்டி தெளிவாக அமைப்பதன் மூலம் அதிக உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கழக ஆட்சி மலர நாம் வழி வகுக்கலாம்.

    இனி மேலும் தி.மு.க. தலை வர் ஸ்டாலினை நம்புவதை விட்டுவிட்டு நாம் சந்திக்கும் நாளைய நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • அலங்காநல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர் செயலாளர்கள் அழகு ராஜ், குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நிர்வாகிகள் குமார், மனோகரன், முத்துகிருஷ்ணன், மதன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    சமூக விரோதிகள்

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இரு சமூகம் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் ஒரு சில சமூக விரோதிகள் இரு தரப்பினர் மோதல் கொள்ளும் வகையில் இந்த வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு செய்கிறார்கள் என்றனர். மேலும் வதந்திகளுக்கு இடம் அளிக்காமல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தரவும் பொதுமக்கள் உறுதி அளித்தனர்.

    ஒத்துழைப்பு

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுத்தவர்களின் பெயர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பொதுமக்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், சிறுநல்லி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இரு சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×